திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் கொலை முயற்சி, சொத்துச் சேதம் ஏற்படுத்துதல் மற்றும் குற்றமுறு மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்ட வாலிபர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி, சொத்துச் சேதம் ஏற்படுத்துதல் மற்றும் குற்றமுறு மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், அகஸ்தியர்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் கார்த்திகேயராஜன் (வயது 18) நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், மேற்சொன்ன வாலிபர் கொலை முயற்சி, சொத்துச் சேதம் ஏற்படுத்துதல் மற்றும் குற்றமுறு மிரட்டல் போன்ற தொடர் சட்டவிரோத குற்றச் செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால், அம்பாசமுத்திரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகவேல், மேற்சொன்ன வாலிபர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யிடம் பரிந்துரை செய்தார்.
அதன்பேரில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா. சாஸ்திரி பரிந்துரையின்படி, திருநெல்வேலி மாவட்ட கலெக்டரின் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில், மேற்சொன்ன வாலிபர் 20.11.2026 அன்று, தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 134 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.