சென்னை,
தமிழ்நாட்டில் நீட் மறுதேர்வை 1.42 லட்சம் பேர் எழுத உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன.
இந்தியாவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக மே 3-ஆம் தேதி நீட் தேர்வு நடந்தது. ஆனால் முன்கூட்டியே கசிந்த வினாத்தாள் விவகாரம் பின்னர் தெரியவந்தது. இதையடுத்து அந்தத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஜூன் 21-ஆம் தேதி மறு தேர்வு நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த முறை தவறு நேர்ந்து விடக்கூடாது என்பதில் மத்திய அரசு உள்ளது. ஆகவே வினாத்தாள்கள் உறுதியாக அனைத்தும் விமானப்படை விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் எடுத்துச்செல்லப்பட்டன. அவற்றுக்கு துணைராணுவ வீரர்கள் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.
நீட் மறுதேர்வு
இந்த நீட் மறுதேர்வை 22.70 லட்சம் மாணவ -மாணவிகள் எழுதுகின்றார்கள். இதில் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 3.56 லட்சம் பேர் எழுத உள்ளார்கள்.
மராட்டியம் 2.23 லட்சம், ராஜஸ்தான் 2.03 லட்சம்பேர் எழுதுகின்றனர். இந்த 3 மாநிலங்களும் சேர்த்து 34 சதவீத பங்கை வகிக்கின்றன. பீகார் 1.56 லட்சம், கர்நாடகம் 1.45 லட்சம், தமிழ்நாடு 1.42 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளார்கள்.
நீட் தேர்வுக் கட்டணத்தை மாணவர்களுக்கு திருப்பிக் கொடுத்ததுடன் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு நேரம் கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
"மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.15 மணி வரை நீட் தேர்வு நடைபெறும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாலை 6.20 மணி வரை தேர்வு நடைபெறும். பகல் 1.30 மணிக்கு தேர்வு மையங்களின் நுழைவுவாயில் பூட்டப்படும். காலை 11 மணி முதல் 1.30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வந்துவிட வேண்டும்"
இந்தியாவிற்குள் 551 நகரங்கள், வெளிநாடுகளில் 14 நகரங்களில் நாளை மறுநாள் நீட் மறு தேர்வு நேரத்தை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.