தமிழக செய்திகள்

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்வையிட இன்று ஒரே நாளில் 1,500 பேர் வருகை

பேரவை நிகழ்வுகளை பார்வையிட கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் அதிக அளவில் வருகை தந்தனர்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் இன்று மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின்போது பார்வையாளர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படுவது வழக்கம். சட்டப்பேரவை நிகழ்வுகள் தற்போது நேரலை செய்யப்பட்டு வரும் சூழலில், பேரவை நிகழ்வுகளை நேரில் காண்பதற்கும் பார்வையாளர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.

வழக்கமாக சுமார் 1,000 பேர் முதல் 1,200 பேர் வரை சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்ப்பதற்காக வருகை தரும் நிலையில், இன்று ஒரே நாளில் சுமார் 1,500 பேர் சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்வையிடுவதற்காக வருகை தந்தனர். இதில் கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் அதிக அளவில் காணப்பட்டனர். இதனால் சட்டப்பேரவை வளாகம் இன்று அதிகமான கூட்டத்துடன் பரபரப்பாக காணப்பட்டது.

SCROLL FOR NEXT