தமிழக செய்திகள்

எல்.ஐ.சி. ஏஜெண்ட் வீட்டில் 16 சவரன் நகைகள் திருட்டு: போலீசார் விசாரணை

திருச்செந்தூர் அருகேயுள்ள காயாமொழி பகுதியைச் சேர்ந்த எல்.ஐ.சி. ஏஜெண்ட் வீட்டில் பீரோவில் இருந்த 16 சவரன் தங்க நகைகள் திருடு போனதைக் கண்ட அவரது மனைவி அதிர்ச்சி அடைந்தார்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் அருகே எல்.ஐ.சி. ஏஜெண்ட் வீட்டில் பீரோவில் இருந்த 16 சவரன் தங்க நகைகள் திருடு போனது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எல்.ஐ.சி. ஏஜெண்ட்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள காயாமொழி ஆதித்தனார் காலனியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் ராஜேஷ் (வயது 53), எல்.ஐ.சி. ஏஜெண்ட்டாக உள்ளார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மனைவி கடந்த 9-ம் தேதி பணம் எடுப்பதற்காக பீரோவைத் திறந்தபோது, அதிலிருந்த நகைப்பெட்டி காணாமல் போனதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

16 சவரன் நகைகள் திருட்டு, போலீசார் விசாரணை

அந்தப் பெட்டியில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி, கம்மல், மோதிரம் உள்ளிட்ட 16 சவரன் தங்க நகைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து முத்துக்குமார் ராஜேஷ் திருச்செந்தூர் வட்ட போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி நகை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT