தமிழக செய்திகள்

16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; தாய்மாமன் கைது

சிறுமிக்கு ஆசை வார்த்தைகளை கூறி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார் தாய்மாமன்.

பெங்களூரு,

கர்நாடகா மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஹடாடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனது பெற்றோருடன் 16 வயது சிறுமி வசித்து வருகிறாள். சிறுமியின் வீட்டு அருகே தாய்மாமன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், சிறுமியின் உறவினர். சிறுமிக்கு ஆசை வார்த்தைகளை கூறி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை

மேலும், சிறுமியின் மீது அன்பாக இருப்பது போன்று நடித்து தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். இதனை நம்பி சென்ற அந்த சிறுமியை, உறவினர் என்றும் பாராமல் அவர் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.

பெற்றோர் புகார்

பின்னர். குடும்பத்துக்குள் நடந்த இந்த வன்கொடுமையால் மனமுடைந்துபோன சிறுமி, இதுகுறித்து நடந்த உண்மை களை தனது பெற்றோரிடம் கூறினார். இதனையடுத்து. பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பில் ஹடாடி போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

போக்சோ வழக்குப்பதிவு

அதன் பேரில் போலீசார் சிறுமியின் மாமா மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, சிறுமியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது சிறுமியை அவரது மாமாவே பாலியல் பலாத்காரம் செய் தது தெரியவந்தது.

மாமா கைது

இதற்கிடையே தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதும் சிறுமியின் மாமா தலைமறைவானார். இந்த நிலையில் அவர் பதுங்கியிருந்த இடம் போலீசாருக்கு தெரியவரவே, அங்கு விரைந்த போலீசார் சிறுமியின் மாமாவை கைது செய்தனர்.

சிறுமிக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய சொந்த மாமாவே இந்த செயலில் ஈடுபட்டிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கைதானவரிடம் மேலும், பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT