தமிழக செய்திகள்

1,600 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

1,600 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கல்லூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை மறித்து சோதனையிட்டனர். இதில் ரேஷன் அரிசி மூட்டைகள் விற்பனைக்காக கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது. இதில் சுமார் 1,600 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி வந்த செந்திலை போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT