தமிழக செய்திகள்

அண்ணாமலை தொடங்கிய ‘வீ தி லீடர்ஸ்’ இயக்கத்தில் 17 லட்சம் உறுப்பினர்கள்

அண்ணாமலை மக்கள் இயக்கம் என்ற அமைப்பு இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி 'வீ தி லீடர்ஸ்' எனும் புதிய இயக்கத்தை கடந்த 5-ந் தேதி தொடங்கினார். இதில் இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி 17 லட்சத்து 22 ஆயிரத்து 239-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.

அண்ணாமலை புதிய இயக்கம் தொடங்கிய நிலையில், தனது பெயர் மற்றும் புகைப்படத்தை வேறு அமைப்பினர் பயன்படுத்தக்கூடாது என வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து அவரது பெயர். புகைப்படத்துடன் இயங்கி வந்த அண்ணாமலை மக்கள் இயக்கம் என்ற அமைப்பு இயங்காது என அதன் சமூகவலைதள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த இயக்கம் கலைக்கப்பட்டு, அதில் உள்ள உறுப்பினர்கள் அண்ணாமலையின் இயக்கத்தில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் 'எக்ஸ்' தள பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோ பதிவில், இந்த இயக்கத்தில் இதுவரை 17 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்ததில் ஜென் சி இளைஞர்கள் 25.2 சதவீதம் பேர் எனவும், அடுத்து வருகிற உள்ளாட்சி தேர்தலில் 60 ஆயிரத்து 370 உறுப்பினர்களுக்கு போட்டியிட தயாராகி விட்டது. மாறுவோம்... மாற்றுவோம்.. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.