வருசநாடு,
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. இந்த சிறையில் கடந்த 26-ந் தேதி இரவு சிறைக்காவலர்களை தாக்கி விட்டு 17 கைதிகள் தப்பி ஓடினர். தமிழகத்தில் பெரும் பர பரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தப்பி ஓடிய 17 கைதி கைதிகளையும் 40 மணி நேரத்தில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பிடிபட்ட அனைவரையும். க.விலக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. தப்பிச் சென்றதற்கான காரணம் மற்றும் இதற்கு மூளையாக செயல்பட்டவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ பரிசோதனைக்கு பின்பு மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி மீண்டும் தேக்கம் பட்டி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தில் தப்பி ஓடி பிடிபட்ட 17 பேர்களையும் தமிழகத்தின் வெவ்வேறு சிறைக ளுக்கு மாற்ற முடிவு செய்யப் பட்டுள்ளது. அதன்படி மதுரை யைச் சேர்ந்த லிங்கபிரசாத், பிரவீன்குமார், ராஜ்குமார் ஆகிய 3 பேரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்படுகின்ற னர். மற்ற 14 14 பே பேரும் தமிழகத்தில் உள்ள சேலம், கோவை, கடலூர், வேலூர் உள்ளிட பல்வேறு சிறைச்சாலையில் அடைக்கப்பட உள்ளனர்.
சம்பவம் நடந்த தேக்கம்பட்டி சிறைச்சாலையில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு கோபுரங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கைதிகள் தப்பிய விவரம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்துக்கு மூளையாக இருந்தது மதுரையைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் மற்றும் திருப்பதி ஆகியோர்தான் என தெரிய வந்துள்ளது. இவர்களது அண்ணன் ஏற்கனவே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். மற்றொரு அண்ணனை மதுரையில் வெட்டிக் கொலை செய்து விட்டனர். தற்போது சிறையில் உள்ள மீனாட்சிசுந்தரம், திருப்பதி ஆகியோர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவர்கள் சிறையில் இருந்து தப்ப கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே திட்டம்' தீட்டி அதற்காக சிறிய சிறிய குற்றங்களில் கைதாகி உள்ளே இருந்த மேலும் பலரை தங்களுடன் சேர்த்துக் கொண்டனர். அவர்களிடம் சிறையில் இருந்து வெளியேறி மதுரையில் ஒரு இடத்தில் கொள்ளையடிக்க வேண்டும். அங்கு நிறைய பணம், நகை கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதன் பிறகு நாம் வடமாநிலங்களுக்கு சென்று சந்தோசமாக இருக்கலாம் . தங்கள் திட்டத்தை நிறைவேற்ற 26-ந்தேதி இரவு சிறைச்சாலைக்கு பின்பு ஒரு காரை வரவழைத்துள்ளனர். அதன்படியே சிறைச்சாலைக்கு பின்பு அன்று இரவு ஒரு கார் நின்றுள்ளது. ஆனால் அதனை போலீசார் கவனிக்க தவறியுள்ளனர்.
கைதிகள் தப்பிய பிறகு தாமதமாக கார் வந்ததால் அதில் செல்ல முடியாமல் வெளியேறிய 17 பேரும் 3 குழுக்களாக பிரிந்து வெவ்வேறு சென்றுள்ளனர்.
திசைகளில் மற்ற 15 பேர்களும் செருப்பு இல்லாமல் சென்றதால் அவர்களால் நீண்ட தூரம் மலையில் செல்ல முடியவில்லை. ஆனால் திருப்பதி, மீனாட்சி சுந்தரம் மட்டும் செருப்பு அணிந்திருந்ததால் நீண்ட தூரம் ஓடிச் சென்று உள்ளனர். மேலும் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரிடம் லிப்ட் கேட்டு கூடலூர் எல்லை வரை சென்று உள்ளனர். அங்குள்ள ஒருவரிடம் செல்போனை வாங்கி தங்கள் குடும்பத்தினரிடம் பேசியுள்ளனர்.
ஆனால் அதற்குள் 15 பேர் பிடிபட்ட விபரம் இவர்களுக்கு தெரிய வந்துள்ளது. தங்களை போலீசார் பிடித்தால் சுட்டுக் கொன்று விடுவார்கள் என்ற அச்சத்தில் வக்கீல் மூலம் போலீஸ் நிலையத்தில் சரணடைய வந்தபோது போலீசார் அவர்களை பிடித்து விட்டனர்.
மேலும் போலீசாரை தாக்குவதற்கு பயன்படுத்திய சமையல் கரண்டியையும் கைப்பற்றினர்.
மேலும் இது குறித்து திருப்பதி மீனாட்சி சுந்தரம் தெரிவிக்கையில்,
தீபாவளி பண்டிகைக்காக குடும்பத்தினரை சந்திக்க வெளியேறியதாகவும், தாங்கள் இருவர் மட்டும் வெளியேறினால் பிடித்து விடுவார்கள் என நினைத்து மேலும் சிலரை துணைக்கு அழைத்ததாகவும் கூறினர்.
இதனிடையே மீனாட்சி சுந்தரம், திருப்பதியின் தாய் தங்கள் மகனை உயிருடன் ஒப்படைக்க வேண்டும் எனவும் சிறையில் பல்வேறு கொடுமைகள் நடப்பதாகவும், தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.