தமிழக செய்திகள்

கேரளாவில் 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; வருவாய் ஆய்வாளரை தாக்கிய கும்பலுக்கு வலைவீச்சு

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் பறக்கும் படை தாசில்தார் பாரதி தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி,

கேரள எல்லைக்குள் 17 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்ய முயன்றபோது, வருவாய் ஆய்வாளரை தாக்கிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்து தப்பி ஓடிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வாகன சோதனை

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் பறக்கும் படை தாசில்தார் பாரதி தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நிற்காமல் சென்ற மினி லாரியைத் துரத்திச் சென்றனர். அந்த லாரி கேரள எல்லைக்குள் இஞ்சிவிளையில் உள்ள அரிசி குடோனுக்குள் சென்றது.

கேரளாவில் 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

அதிகாரிகள் அந்த குடோனை சோதனையிட முயன்றபோது, அங்குள்ள கும்பல் வருவாய் ஆய்வாளர் தினேஷ் என்பவரை தாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்துத் தப்பியோடியது. இரு மாநில போலீசார் நடத்திய சோதனையில், குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.