தமிழக செய்திகள்

ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்பும் போது ரூ.1¾ லட்சம் மோசடி: ஊழியர் மீது போலீசில் புகார்

போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போரூர்,

செங்கல்பட்டு, மாவட்டம் செய்யூரை சேர்ந்தவர் பாரதி (29). இவர் கடந்த 1½ மாதமாக கோடம்பாக்கம் பகுதியில் செயல்படும் ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் நிரப்பும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் தினசரி வேளச்சேரியில் இருந்து பணத்தை வாங்கி கொண்டு வாகனம் மூலம் சென்னையில் உள்ள பல்வேறு ஏ.டி.எம் மையங்களுக்கு பணம் நிரப்பி வருவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி பாரதி உள்ளிட்ட 2பேர் கே.கே நகர் முனுசாமி சாலையில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு பணம் நிரப்ப சென்றனர்.அப்போது உடனிருந்த நபர் கழிவறை சென்றுவிட்டு சிறிது திரும்பி யபோது பாரதி “ எனது தாய் உடல்நலம் பாதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வந்தது, உடனடியாக நான் ஊருக்கு செல்ல வேண்டும்” என்று கூறி புறப்பட்டு சென்று விட்டார். மறுநாள் வங்கியில் இருந்து ஏ.டி.எம். மையத்தில் நிரப்பப்பட்ட பணத்தில் ரூ.1லட்சத்து 76ஆயிரம் குறைவாக உள்ளதாக தனியார் நிறுவனத்துக்கு தகவல் வந்தது.

இதையடுத்து மேலாளர் பாரதியின் செல்போனை தொடர்பு கொண்டபோது “சுவிட்ச் ஆப்” செய்யப்பட்டு இருந்தது. பணத்துடன் மாயமான ஊழியர் பாரதி மீது நடவடிக்கை எடுக்க கோரி கே.கே நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.