தமிழக செய்திகள்

180 மாணவிகள் ஈஷா யோக மையத்தில் ஆன்மிகம், இயற்கை மற்றும் யோக அனுபவப் பயணம்

இந்திய பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் மனித நல்வாழ்வுக்கான ஈஷாவின் பல்வேறு முயற்சிகள் குறித்து மாணவிகள் அறிந்து கொண்டனர்.

கோவை,

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Hindusthan College of Arts & Science) சார்பில் 180 மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட குழுவினர் ஜூலை 5, 2026 அன்று கோவை ஈஷா யோக மையத்திற்கு கல்வி மற்றும் அனுபவப் பயணமாக வருகை தந்தனர்.

வருகை தந்த மாணவிகள் ஆதியோகி, தியானலிங்கம், லிங்கபைரவி உள்ளிட்ட ஈஷா வளாகத்தின் முக்கிய ஆன்மிகத் தலங்களை பார்வையிட்டு, அவற்றின் சிறப்புகள், யோக அறிவியல், இந்திய பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் மனித நல்வாழ்வுக்கான ஈஷாவின் பல்வேறு முயற்சிகள் குறித்து அறிந்து கொண்டனர்.

அனுபவப் பயணம்

மேலும், இயற்கைச் சூழலுடன் இணைந்த அமைதியான வளாகத்தை சுற்றிப்பார்த்த மாணவிகள், மனஅமைதி, ஒழுக்கம், ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் யோகத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வைப் பெற்றனர். இந்த அனுபவப் பயணம் மாணவிகளுக்கு ஆன்மிகம், இயற்கை மற்றும் தனிமனித மேம்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைந்த வகையில் உணரச் செய்த மறக்கமுடியாத பயணமாக அமைந்தது.