தமிழக அரசு 
தமிழக செய்திகள்

தமிழகத்தில் 19 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

மாவட்ட கலெக்டர்கள் உள்பட தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தலைமைச் செயலாளர் சாய்குமார் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் எஸ்.பி. கார்த்திகா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கூடுதல் செயலாளர் எஸ். வளர்மதி அயலகத் தமிழர் மறுவாழ்வு மற்றும் நலத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அயலகத் தமிழர் மறுவாழ்வு மற்றும் நலத்துறை இயக்குனர் ஆர். சதீஷ், சேலம் பட்டு வளர்ச்சித் துறை இயக்குனராக மாற்றப்படுகிறார். நெல்லை மாநகராட்சி ஆணையர் டாக்டர் மோனிகா ராணா, தென்காசி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.கரூர் மாவட்ட கலெக்டர் சி. முத்துகுமரன், திருப்பூர் மாவட்ட கலெக்டராகிறார். ஐ.ஏ.எஸ். பணியில் இணைந்ததைத் தொடர்ந்து, கவர்னரின் துணைச் செயலாளர் (பல்கலைக்கழகங்கள்) எஸ். பிரசன்னா ராமசாமி, கரூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுகிறார்.

சப்-கலெக்டர்

ஐ.ஏ.எஸ். பணியில் இணைந்ததைத் தொடர்ந்து, சி.எம்.டி.ஏ. கோயம்பேடு அங்காடி நிர்வாகக் குழுவின் தலைமை நிர்வாக அலுவலர் எம். இந்துமதி, போக்குவரத்துத் துறை துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.ஏ.எஸ். பணியில் இணைந்ததைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியின் அம்மா உணவக மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் எஸ். சங்கீதா, சென்னை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனராக மாற்றப்படுகிறார்.

ஐ.ஏ.எஸ். பணியில் இணைந்ததைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலர் என். காளிதாஸ், சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தின் கூடுதல் இயக்குனராக (பொது) நியமிக்கப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம், கரூர் கோட்ட சப்-கலெக்டர் ஆர். வெங்கடேஸ்வரன், கடலூர் மாவட்டம், சிதம்பரம் கோட்ட சப்-கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர் கே.சாந்தி, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை மாநகராட்சி

திருப்பூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் மனிஷ் எஸ். நர்னவரே, டான்பிநெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.ஏ.எஸ். பணியில் இணைந்ததை தொடர்ந்து, தர்மபுரி சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் ஆர். பிரியா, சாகோசெர்வ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

ஐ.ஏ.எஸ். பணியில் இணைந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் பொது மேலாளர் (கொள்முதல்) ஆர். ராஜகிருபாகரன், எல்காட் நிறுவனத்தின் செயல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.ஏ.எஸ். பணியில் இணைந்ததைத் தொடர்ந்து, மின் ஆளுமை இயக்ககத்தின் இணை இயக்குனர் (தொழில்நுட்பம்) கே. பிரியா, நெல்லை மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

சொத்து மேலாண்மை

ஐ.ஏ.எஸ். பணியில் இணைந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகத்தின் பொது மேலாளர் எம்.மணிமேகலை, தமிழ்நாடு நீர்ப்பிடிப்புப் பகுதி மேம்பாட்டு முகமையின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.ஏ.எஸ். பணியில் இணைந்ததைத் தொடர்ந்து, சென்னை குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் இயக்ககத்தின் இணை இயக்குனர் ஏ. மீனா பிரியதர்ஷினி, குன்னூர் தமிழ்நாடு சிறு தேயிலை விவசாயிகள் தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

ஐ.ஏ.எஸ். பணியில் இணைந்ததைத் தொடர்ந்து, சென்னை நெடுஞ்சாலைத் துறையின் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் கையகப்படுத்துதல்) டாக்டர் டி.செங்கோட்டையன், சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.ஏ.எஸ். பணியில் இணைந்ததைத் தொடர்ந்து, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரகத்தின் இணை ஆணையர் எஸ். சாந்தி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT