தமிழக செய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

பாளையங்கோட்டையில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று செல்லத்துரை என்பவரை சிலர் கத்தியைக் காட்டி மிரட்டி மோதிரம், பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லை மாநகர போலீசார், நாங்குநேரி அருகே உள்ள மருதகுளத்தைச் சேர்ந்த மில்டன் (வயது 38), இம்மானுவேல் தாம்சன் பீட்டர் (34) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து தங்க சங்கிலி, ரூ.1 லட்சம் மீட்கப்பட்டது.

SCROLL FOR NEXT