தமிழக செய்திகள்

சட்ட விரோதமாக மதுபானம் விற்ற 2 பேர் கைது: 56 பாட்டில்கள் பறிமுதல்

திருநெல்வேலி மாநகர பகுதியில் மது விலக்கு அமலாக்க காவல் துறையினர் ரோந்து பணிக்கு சென்றனர்.

திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு பகுதியில், சந்திப்பு காவல் துறையினர் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது அந்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட பாளையங்கோட்டையை சேர்ந்த மூக்காண்டி (வயது 42) என்பவரிடமிருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, சந்திப்பு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, மூக்காண்டியை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதேபோல் திருநெல்வேலி மாநகர பகுதியில் மது விலக்கு அமலாக்க காவல் துறையினர் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது தெற்கு புறவழி சாலை பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த இசக்கிராஜா(29) என்பவரிடமிருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, மது விலக்கு அமலாக்க காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, இசக்கிராஜாவை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.