தமிழக செய்திகள்

பழவூரில் மணல் திருடிய 2 பேர் கைது: லாரி பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம், பழவூர் பகுதியில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், பழவூர் பகுதியில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பணகுடியைச் சேர்ந்த கோபாலக்கண்ணன் (வயது 41) மற்றும் எபினேசர்(28) ஆகிய 2 பேரும் வந்த டாரஸ் லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் 10 யூனிட் குளத்து மணலை எந்தவித அனுமதியும் இன்றி சட்ட விரோதமாக அள்ளிக் கொண்டு வந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து பழவூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கோபாலகண்ணன், எபினேசர் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து 10 யூனிட் குளத்து மணல் மற்றும் டாரஸ் லாரியை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.