தமிழக செய்திகள்

தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

நெல்லை பாளையங்கோட்டையில் சாலையில் நடந்து சென்ற ஒரு தொழிலாளியை வழிமறித்த 2 வாலிபர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தை பறித்துச் சென்றனர்.

நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் சாலையில நடந்து சென்ற ஒரு தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளியிடம் பணம் பறிப்பு

நெல்லை பாளையங்கோட்டை முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 43). தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை- திருச்செந்தூர் ரோட்டில் உள்ள டீக்கடை அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர் சங்கரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்ததாக கூறப்படுகிறது.

2 வாலிபர்கள் கைது

இதுகுறித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த சந்துரு(26), வேல்முருகன்(23) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT