திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியில் கொள்ளை, மிரட்டல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட நாங்குநேரி, தம்புபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் நவின் (வயது 25) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நாங்குநேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அதேபோல் திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வீரவநல்லூரை சேர்ந்த பரமசிவம் மகன் சின்ராசு(23) என்பவர் போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார். இவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி நேற்று தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நவின் மதுரை மத்திய சிறையிலும், சின்ராசு பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.