தமிழக செய்திகள்

கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை மாநகரில் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் 2 பேர் ஈடுபட்டு வந்தனர்.

திருநெல்வேலி, சங்கர்நகரைச் சேர்ந்த கணேசன் மகன் மணிகண்டன் (வயது 27) மற்றும் பொன்னையா மகன் கணேசன்(54) ஆகியோர் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் வினோத் சாந்தாராம் (கிழக்கு), போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ் (பாளையங்கோட்டை சரகம் பொறுப்பு, மேலப்பாளையம் சரகம்), மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) செந்தில்தங்கத்துரை ஆகியோரின் பரிந்துரையின்பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவுப்படி நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.