தமிழக செய்திகள்

அடையாறு பகுதியில் 2 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு: இழப்பீட்டுத் தொகை ரூ.12.40 லட்சம் வசூல்

மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை 9445857591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்தி அறிக்கையில்,

18.02.2026 அன்று தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்திற்க்குட்பட்ட சென்னை/வடக்கு, மற்றும் சென்னை/மையம் அதிகாரிகள் அடையார் கோட்டம் அடையாறு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 2 உயர் மதிப்புள்ள மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் வாயிலாக ரூ. 12,39,426 /- 2 மின் இணைப்புக்கு இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது.

மேலும், சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன் வந்து அதற்குரிய சமரசத் தொகையாக ரூ.62,000/- செலுத்தியதால், அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை செயற்பொறியாளர்/ அமலாக்கம்/ சென்னை கைபேசி 9445857591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT