சென்னை,
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
18.02.2026 அன்று தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்திற்க்குட்பட்ட சென்னை/வடக்கு, மற்றும் சென்னை/மையம் அதிகாரிகள் அடையார் கோட்டம் அடையாறு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 2 உயர் மதிப்புள்ள மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் வாயிலாக ரூ. 12,39,426 /- (ரூபாய் பன்னிரண்டு லட்சத்து முப்பத்து ஒன்பதாயிரத்து நானூற்று இருபத்தி ஆறு ரூபாய் மட்டும்) 2 மின் இணைப்புக்கு இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது.
மேலும், சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன் வந்து அதற்குரிய சமரசத் தொகையாக ரூ.62,000/- (ரூபாய் ஆறுபத்து இரண்டாயிரம் மட்டும்) செலுத்தியதால், அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.
மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை செயற்பொறியாளர்/ அமலாக்கம்/ சென்னை கைபேசி 9445857591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.