தமிழக செய்திகள்

ஆற்றில் டிராக்டர் கவிழ்ந்தது; 2 பேர் காயம்

நன்னிலம் அருகே ஆற்றில் டிராக்டர் கவிழ்ந்து 2 பேர் காயம் அடைந்தனர்.

நன்னிலம் அருகே ஆற்றில் டிராக்டர் கவிழ்ந்து 2 பேர் காயம் அடைந்தனர்.

டிராக்டர் கவிழ்ந்தது

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள சோத்தக்குடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவராஜ் (வயது22). இவர் பனங்குடியில் இருந்து நெல் மூட்டைகளை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு மூலமங்கலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இறக்கிவிட்டு மீண்டும் நெல் மூட்டைகளை ஏற்றுவதற்காக பனங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

டிராக்டரை சிவராஜ் ஓட்டியுள்ளார். டிராக்டரில் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (26) என்பவரும் அமர்ந்து இருந்தார். மூலமங்கலம் சட்ரஸ் அருகே சென்றபோது முன்பக்க டயர் வெடித்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோரம் உள்ள ஆற்றில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

நன்னிலம் அருகே ஆற்றில் டிராக்டர் கவிழ்ந்து 2 பேர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் சிவராஜ் மற்றும் பிரகாசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

SCROLL FOR NEXT