தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் 2 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படியாக பைக்கில் வந்த 2 வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பகுதிகள் விற்பனைக்காக 2 கிலோ கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் சோதனை:

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்ய 2 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

2 கிலோ கஞ்சா, ஒரு பைக் பறிமுதல்:

இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரென்னிஸ் வழக்குப்பதிவு செய்து, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த முத்தையாபுரம், முள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர்களான ரவி மகன் கண்ணன் (வயது 23) மற்றும் சுயம்புலிங்கம் மகன் மணிகண்டன்(24) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் ஒரு பைக்கை பறிமுதல் செய்தார்.