திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பெரும்பத்து பகுதியில் 2.3.2026 அன்று, சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி 2 பேர் கொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளான நாங்குநேரியை சேர்ந்த முருகன் மகன் சுப்பையா (வயது 19), பன்னீர்செல்வம் மகன் அந்தோணி மைக்கேல் ராஜா(19), நெடுங்குளத்தை சேர்ந்த முருகன் மகன் வசந்தகுமார்(21), தம்புபுரம், நம்பிநகரை சேர்ந்த முத்தையா மகன் ராஜா(19), தென்னிமலையை சேர்ந்த சுடலைகண்ணு மகன் கண்ணன்(21), வள்ளியூரை சேர்ந்த ஆண்டி மகன் உச்சிமாகாளி(20), தென்னிமலையை சேர்ந்த சுடலைகண்ணு மகன் கல்யாணி(20) ஆகிய 7 பேர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு நாங்குநேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.க்கு வேண்டுகோள் விடுத்தார்.
அவரது வேண்டுகோளின்பேரில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், மேற்சொன்ன 7 பேரையும் நேற்று நாங்குநேரி காவல் நிலைய போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.