தமிழக செய்திகள்

இரணியல் அருகே மது விற்ற 2 பேர் கைது

இரணியல் அருகே மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திங்கள்சந்தை:

இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் இரணியல் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 16 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த நிஷாந்த் (வயது 24) என்பதும், விற்பனைக்காக மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல அந்த பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட சதாசிவம்பிள்ளை (37) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

--

SCROLL FOR NEXT