தமிழக செய்திகள்

சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 2 பவுன் செயின் பறிப்பு

வாலிபர் ஒருவர் மூதாட்டி கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து ஓடி விட்டார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஜெயங்கொண்டான் பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் மனைவி பாஞ்சாலி (வயது 83). இவர் நேற்று அதிகாலை தனது வீட்டில் இருந்து கடைக்கு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பாஞ்சாலி கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து ஓடி விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT