தமிழக செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 2 பவுன் நகை பறிப்பு

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி அமுதா (வயது 38). இவர் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார்.

அப்போது மர்ம நபர்கள், அமுதா கழுத்தில் இருந்த 2 பவுன் நகையை பறித்ததுடன், வீட்டில் இருந்த செல்போனையும் திருடி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.