தமிழக செய்திகள்

2 மாநில எம்.எல்.ஏ. அந்தஸ்தை பெற்ற என். ஆனந்த்

விஜய் கட்சி தொடங்கியவுடன் என். ஆனந்த் தனது ஓட்டை தமிழகத்தின் சோழிங்கநல்லூர் தொகுதிக்கு இடமாற்றம் செய்து கொண்டார்.

சென்னை,

த.வெ.க. பொதுச்செயலாளரான என். ஆனந்த் சென்னை தி.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக என். ஆனந்த் புதுவையில் கடந்த 2006-ல் புஸ்சி தொகுதியில் முன்னாள் அமைச்சர் கண்ணன் கட்சியான புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

விஜய் கட்சி தொடங்கியவுடன் என். ஆனந்த் தனது ஓட்டை தமிழகத்தின் சோழிங்கநல்லூர் தொகுதிக்கு இடமாற்றம் செய்து கொண்டு தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் என். ஆனந்த 2 மாநிலங்களில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.