சென்னை,
சென்னை கோயம்பேட்டில் உள்ள மார்க்கெட்டில் காய்கறி வீணாகி வருவதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஏனெனில், போரால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சிறிய ஓட்டல்கள் பெரும்பாலும் மூடப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பெரிய ஓட்டல்களில் சமைக்கும் உணவு வகைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் மார்க்கெட்டில் இருந்து ஆர்டர் செய்யும் அளவு பெரிதும் குறைந்துள்ளதால், காய்கறி டன் கணக்கில் தேக்கம் அடைந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். விலை கணிசமான அளவு குறைந்து இருந்தாலும், காய்கறியை வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை என்றும், இதனால் காய்கறி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.