தமிழக செய்திகள்

நெல்லையில் காய்ச்சலுக்கு 2 வயது பெண் குழந்தை பலி

நெல்லை பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 2 வயது மகளுக்கு கடந்த 5 நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது.

நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட 2 வயது பெண் குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது.

2 வயது பெண் குழந்தைக்கு காய்ச்சல் பாதிப்பு

நெல்லை பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி-சினேகா தம்பதியின் 2 வயது மகள் மகாலட்சுமிக்கு கடந்த 5 நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது.

உயிரிழப்பு

தனியார் ஆஸ்பத்திரியில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கே குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT