தமிழக செய்திகள்

இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் வீடியோ வெளியிட்ட 2 வாலிபர்கள் கைது

தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக, கையில் அரிவாளுடன் இருக்கும் வீடியோவை வாலிபர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் அரிவாளுடன் சமூக வலைதளத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களைப் பதிவிட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் வீடியோ; வாலிபர் கைது

தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக, கையில் அரிவாளுடன் இருக்கும் வீடியோவை வாலிபர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து கண்காணிப்பு மேற்கொண்ட மாசார்பட்டி காவல் நிலைய போலீசார், வீடியோவில் இருந்த நபர் மாசார்பட்டி, ராமசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த மணி மகன் ஆனந்த் (வயது 21) என்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மற்றொரு வாலிபர் கைது

இதேபோல் புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் அரிவாளுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வாலிபர் குறித்துப் புதியம்புத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் அவர் புதியம்புத்தூர், புதுப்பச்சேரி பகுதியைச் சேர்ந்த பெருமாள்சாமி மகன் கார்த்திக்(எ) கவாஸ்கர்(24) என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அந்த வாலிபரை புதியம்புத்தூர் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

SCROLL FOR NEXT