விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் முத்தாம்பாளையம் - அண்ணாமலை ஹோட்டல் புறவழிச்சாலையில் பைக் மீது லாரி மோதியதில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் முத்தாம்பாளையம் பகுதியில் உள்ள அண்ணாமலை ஹோட்டல் புறவழிச்சாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் 2 இளைஞர்கள் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். புறவழிச்சாலையில் திடீரென யு-டர்ன் எடுத்து திரும்ப முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக அதிவேகமாக வந்த லாரி அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த அருண் மற்றும் நரேஷ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த விழுப்புரம் போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.