தமிழக செய்திகள்

கத்தியுடன் சுற்றிய 2 வாலிபர்கள் கைது

பழனி அடிவாரம் பகுதியில் கத்தியுடன் சுற்றி திரிந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

பழனி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமையிலான போலீசார் அடிவாரம் பகுதியில் ரோந்து சென்றனர். மதனபுரம் வாய்க்கால் பகுதியில் சந்தேப்படும்படி 2 பேர் நின்று கொண்டிருந்தனர். பின்னர் போலீசார் அவர்களை பிடித்து சோதனை செய்தபோது, அவர்களிடம் கத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர்கள் அடிவாரத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 31), பிரதீஷ் (27) என்பதும், கையில் கத்தியுடன் சுற்றி திரிந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தனர். கைதான 2 பேர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT