சென்னை,
டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, டாஸ்மாக் மதுக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் தொகையும், 11.67 சதவீதம் கருணைத்தொகையும் சேர்த்து 20 சதவீதம் போனஸ் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தொகை இன்று (புதன்கிழமை) மின்னணு பரிமாற்றம் மூலம் மாவட்ட மேலாளரின் செயல்பாட்டு கணக்கிற்கு தனியாக அனுப்பி வைக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது.
மேலும் போனஸ் மற்றும் கருணைத்தொகையை உடனடியாக பணியாளர்களின் வங்கிக்கணக்கு மூலம் வழங்க வேண்டும் என்றும், முறையான ரசீதுகளைப் பெற வேண்டும் என்றும் அரசு ஆணையிட்டுள்ளது. எனவே இன்றே டாஸ்மாக் கடை பணியாளர்களின் வங்கிக்கணக்குகளில் 20 சதவீத போனஸ் தொகை அனுப்பி வைக்கப்படும் என்று தெரிகிறது.