தமிழக செய்திகள்

திருநெல்வேலியில் 20 யூனிட் குண்டுகல், லாரி பறிமுதல்: வாலிபர் கைது

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதியில் சேரன்மகாதேவி மண்டல துணை வட்டாட்சியர் புஷ்பலதா முக்கூடலில் இருந்து ஆலங்குளம் மெயின் ரோடு தாளார்குளம் விலக்கு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதியில் சேரன்மகாதேவி மண்டல துணை வட்டாட்சியர் புஷ்பலதா முக்கூடலில் இருந்து ஆலங்குளம் மெயின் ரோடு தாளார்குளம் விலக்கு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது ஆலங்குளம், கரும்புளியூத்து பகுதியைச் சேர்ந்த ஜெபஸ்டின் (வயது 30) என்பவர் வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது அதில் சட்ட விரோதமாக 20 யூனிட் குண்டுகற்களை எந்தவித அனுமதியும் இன்றி ஏற்றி வந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து சேரன்மகாதேவி மண்டல துணை வட்டாட்சியர், முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், முக்கூடல் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஜெபஸ்டினை நேற்று கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து 20 யூனிட் குண்டுகற்கள் மற்றும் 1 டாரஸ் லாரியை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.