தமிழக செய்திகள்

திருப்பூரில் பா.ஜ.க. பார்டர் போட்ட 200 வேட்டிகள் பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திட்டுப்பாறை பகுதியில் வந்த ஒரு காரை நிறுத்தி தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் காங்கயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திட்டுப்பாறை பகுதியில் வந்த ஒரு காரை நிறுத்தி தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அந்த காரில் பா.ஜனதா கட்சியின் பார்டர் போட்டிருந்த 200 வேட்டிகள் இருப்பது தெரியவந்தது. இதையொட்டி காரை ஓட்டி வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதில் அவர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த கடுங்கொண்பெருவழுதி(60) என்றும், அவர் கொண்டு சென்ற வேட்டிகளுக்கு உரிய ரசீது இல்லை என்றும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த வேட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT