தமிழக செய்திகள்

2026 சட்டசபை தேர்தல்: ரூ.19.8 கோடி செலவிட்ட தவெக: திமுகவை விட பலமடங்கு குறைவு

சட்டசபை தேர்தலுக்கு திமுக ரூ.197 கோடி​யும், அதி​முக ரூ.112 கோடி​யும் செலவு செய்து இருப்பதாக கணக்கு விவரங்கள் சமர்பித்து இருந்தன.

தமிழகம் மற்​றும் புதுச்​சேரி சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஏப்​ரல் மாதம் நடை​பெற்​றன. இதில் போட்​டி​யிட்ட அரசி​யல் கட்​சிகள் தேர்​தல் ஆணை​யத்​தின் விதி​முறை​களின்​படி தங்​கள் தேர்​தல் வரவு-செலவு கணக்​கு​களைத் தாக்​கல் செய்​ய​வேண்​டும். அதன்​படி திமுக, அதி​முக, நாம் தமிழர் ஆகிய கட்​சிகள் தங்​களின் தேர்​தல் செல​வீன பிர​மாணப் பத்​திரங்​களை தேர்​தல் ஆணை​யத்​திடம் அதி​காரப்​பூர்​வ​மாக தாக்​கல் செய்​துள்​ளன. அதி​கபட்​ச​மாக திமுக ரூ.197 கோடி​யும், அதி​முக ரூ.112 கோடி​யும் செலவு செய்து இருப்பது தெரியவந்தது. தற்போது தவெக தாக்கல் செய்த செலவு கணக்கு விவரங்களும் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக்கழகம் தேர்தலுக்காக ரூ.19.8 கோடி செலவு செய்துள்ளது.

10ல் ஒரு பங்கு

திமுக செலவு செய்துள்ள ரூ.197.84 கோடியுடன் ஒப்பிடுகையில் 10ல் ஒரு பங்கு மட்டுமேயாகும். தவெக செலவிட்ட மொத்த தொகையில், விளம்பரத்திற்காக ரூ.6.34 கோடி, விஜய்யின் விமான பயண செலவு ரூ.3.54 கோடி, பிரசார பொருட்கள் ரூ.40.54 லட்சம், பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோ செலவு ரூ.2.06 கோடி செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவுகள் ரூ.7.02

தேர்தல் காலத்தில் அனைத்து வழிகளிலும் கிடைத்த வரவுகள் ரூ.7.02 கோடியாகும். தேர்தல் அறிவிக்கப்பட்டபோது கட்சியின் தொடக்க கையிருப்பு ரூ.3.03 கோடியாக இருந்தது; தேர்தல் காலத்தில் கட்சிக்குக் கிடைத்த வரவுகள் ரூ.7.02 கோடியாக இருந்தன. சட்டமன்ற தேர்தலில் தவெக 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. இதில், 108 இடங்களில் வெற்றி பெற்றது. விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்றார்.

SCROLL FOR NEXT