தமிழக செய்திகள்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் உள்ள 3 அலகுகளில் 210 வீதம் 630 மெகாவாட்டும் இரண்டாவது யூனிட் உள்ள 2 அலகுகளின் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் முதல் யூனிட்டில் 1-வது அலகில் உள்ள கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கோளாறால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT