தமிழக செய்திகள்

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

பராமரிப்பு பணி காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது

சேலம்,

சேலம் மாவட்டம் மேட்டூரில் 840 மெகாவாட் கொண்ட அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் வீதம் 4 யூனிட்டும், அதன் அருகில் 600 மெகா வாட் கொண்ட ஒரு யூனிட்டும் உள்ளது. இந்த 2 அனல் மின் நிலையங்களிலும் நாள் ஒன்றுக்கு 23 ஆயிரம் டன் நிலக்கரி எரிக்கப்பட்டு 1440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

பராமரிப்பு பணி

இந்நிலையில் 210 மெகாவாட் கொண்ட அனல் மின் நிலையத்தில் 2-வது அலகில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக 2-வது அலகில் இன்று முதல் 20 நாட்களுக்கு 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி முடிந்தவுடன் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT