சென்னை,
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108, தி.மு.க. கூட்டணி 73, அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்றது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து த.வெ.க. ஆட்சி அமைக்க இருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்க இருக்கிறார்.
இந்த நிலையில், 17-வது சட்டசபைக்குள் 22 பெண் உறுப்பினர்கள் நுழைய இருக்கின்றனர். த.வெ.க.வில் இருந்து 12, அ.தி.மு.க.வில் இருந்து 6, தே.மு.தி.க., பா.ம.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளில் இருந்து தலா ஒருவர் இடம்பெறுகின்றனர். அவர்களின் விவரம் வருமாறு:-
1.எம்.ஆர்.பல்லவி (த.வெ.க., திரு.வி.க.நகர்), 2.காமாட்சி (த.வெ.க., பல்லாவரம்), 3.மரகதம் குமரவேல் (அ.தி.மு.க., மதுராந்தகம்), 4.சிந்து (த.வெ.க., குடியாத்தம்), 5.எல்.ஜெயசுதா (அ.தி.மு.க., ஆரணி), 6.பிரேமலதா விஜயகாந்த் (தே.மு.தி.க., விருத்தாசலம்), 7.உஷாராணி (அ.தி.மு.க., ஏற்காடு), 8.சவுமியா அன்புமணி (பா.ம.க., தர்மபுரி), 9.மரகதம் வெற்றிவேல் (அ.தி.மு.க., பாப்பிரெட்டிப்பட்டி), 10.விஜயலட்சுமி (த.வெ.க., குமாரபாளையம்).
11.தமிழ்செல்வி (த.வெ.க., பவானிசாகர்), 12.சத்தியபாமா (த.வெ.க., திருப்பூர் வடக்கு), 13.கமலி (த.வெ.க., அவினாசி), 14.சத்தியபாமா (அ.தி.மு.க., தாராபுரம்), 15.கனிமொழி சந்தோஷ் (த.வெ.க., கவுண்டம்பாளையம்), 16.லீமாரோஸ் (அ.தி.மு.க., லால்குடி), 17.சத்யா (த.வெ.க., கிருஷ்ணராயபுரம்), 18.லதா (மா.கம்யூ, கீழ்வேளூர்), 19.குழந்தை ராணி நாச்சியார் (த.வெ.க., சிவகங்கை), 20.கீர்த்தனா (த.வெ.க., சிவகாசி), 21.ஜெகதீஸ்வரி (த.வெ.க., ராஜபாளையம்), 22.தாரகை கத்பர்ட் (காங்கிரஸ், குளச்சல்).