தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் 23 கிலோ புகையிலை பொருட்கள், ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக ஒரு நபரை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் அருகில் உள்ள ஓடை அருகில் சந்தேகப்படும்படியாக ஒரு காரில் வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அதில் அந்த நபர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக காரில் வைத்திருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக காரில் வைத்திருந்த கோவில்பட்டி ஊரணி பகுதியை சேர்ந்த செல்வம் மகன் பால்பாண்டியன் (வயது 43) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 23 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்தார்.