தமிழக செய்திகள்

சென்னையில் 25 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

சென்னை வியாசர்பாடி பகுதியில் போதை மாத்திரை, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே 25 கிலோ கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை சேர்ந்த சூரியபிரகாஷ் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல வியாசர்பாடி பகுதியில் போலீசார் ரோந்து பணியின்போது போதை மாத்திரை, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தென்னரசு(20), அசோக்குமார்(20), திருமலை(26) உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போதை மாத்திரைகள், கஞ்சா, ரூ.5 லட்சத்து 48 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.