தமிழக செய்திகள்

நிர்வாக வசதிக்காக த.வெ.க.வில் மேலும் 27 மாவட்டங்கள் உருவாக்கம்

27 மாவட்டங்களை உருவாக்கி அதற்கு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை முதல்-அமைச்சர் விஜய் நியமித்துள்ளார்.

சென்னை,

த.வெ.க.வில் மேலும் 27 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் 2 அமைச்சர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைத்துள்ளது.

முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு

த.வெ.க. அமைப்பு ரீதியாக 128 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். தற்போது நிர்வாக வசதிக்காக மேலும் 27 மாவட்டங்களை உருவாக்கி அதற்கு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை த.வெ.க. தலைவரும், முதல்-அமைச்சருமான விஜய் நியமித்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

மாவட்ட செயலாளர்கள் பட்டியல்

1. விருதுநகர் மேற்கு - அமைச்சர் கீர்த்தனா,

2. மதுரை வடக்கு- கருப்பையா எம்.எல்.ஏ,

3. மதுரை மத்தியம்- வி.எம்.எஸ். முஸ்தபா எம்.எல்.ஏ.,

4. மதுரை கிழக்கு- கார்த்திகேயன் எம்.எல்.ஏ.,

5. புதுக்கோட்டை மேற்கு- முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்,

6. நாமக்கல் தென்கிழக்கு- சந்திரசேகர் எம்.எல்.ஏ.

7. தேனி வடகிழக்கு - சபரி ஐயங்கரன் எம்.எல்.ஏ.

8. தேனி தென்மேற்கு- ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ.,

9. தூத்துக்குடி மத்தியம் - அமைச்சர் ஸ்ரீநாத்,

10. திருவள்ளூர் வடமேற்கு - டாக்டர் அருண்குமார் எம்.எல்.ஏ.,

11.திருப்பூர் தென்கிழக்கு - முன்னாள் எம்.எல்.ஏ. சத்யபாமா,

12. திருப்பத்தூர் தெற்கு- திருப்பதி எம்.எல்.ஏ.,

13. நெல்லை தெற்கு - டாக்டர் சதீஷ் கிறிஸ் டோபர் எம்.எல்.ஏ.,

14. நெல்லை கிழக்கு - முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா,

15. திருச்சி புறநகர் தெற்கு- நவல்பட்டு விஜி எம்.எல்.ஏ.,

16. திண்டுக்கல் தென்மேற்கு - அய்யனார் எம்.எல்.ஏ.,

17. தர்மபுரி புறநகர் மேற்கு கஜேந்திரன் எம்.எல்.ஏ.,

18. சேலம் மத்திய மேற்கு லட்சுமணன் எம்.எல்.ஏ.,

19. சேலம் தெற்கு பழனிவேல் எம்.எல்.ஏ.,

20. சென்னை தெற்கு - அருள்பிரகாசம் எம்.எல்.ஏ.,

21. செங்கல்பட்டு வடக்கு - காமாட்சி எம்.எல்.ஏ.,

22. செங்கல்பட்டு கிழக்கு-தையூர் எஸ்.குமரவேல்,

23. கோவை கிழக்கு -ஸ்ரீ கிரி பிரசாத் எம்.எல்.ஏ.,

24. கிருஷ்ணகிரி தென்கிழக்கு -இளையராஜா,

25. கரூர் தெற்கு - சத்யா எம்.எல்.ஏ.,

26. ஈரோடு புறநகர் மேற்கு - முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயக்குமார்,

27. ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம்- சண்முகன் எம்.எல்.ஏ.

இவ்வாறு த.வெ.க. வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.