தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க தவெக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி ‘வெற்றி தமிழ்நாடு’ முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெற்றது. இதில், 97 நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் ரூ. 67,452 கோடி முதலீடுகளும், 1,06,998 பேருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த நவ.16- ஆம் தேதி வரையில் 112 நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ரூ.1,14,811.91 கோடி முதலீடுகளும், 1,32,771 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என தொழில்துறை அமைச்சா் கீா்த்தனா அறிவித்திருந்தாா்.இந்த நிலையில், முதல் அமைச்சர் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி முதலீட்டாளா்கள் மாநாடு இன்று நடைபெற உள்ளது. இதில், 85 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. மாமல்லப்புரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.
இதுகுறித்து தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: , ‘கடந்த 6 மாதங்களில், முதலீடுகளை ஈா்ப்பதில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. திட்டங்கள் முன்னோக்கி நகா்கின்றனவா? முதலீடுகள் தொழிற்சாலைகள், உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புகளாக மாறுகின்றனவா? அா்த்தமுள்ள வேலைவாய்ப்புகளை நாம் உருவாக்குகிறோமா? இந்தக் கேள்விகளில்தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
முதல் அமைச்சர் விஜய் தலைமையின் கீழ், தொழில் நிறுவனங்கள் நம்பிக்கையுடன் முதலீடு செய்யவும், திட்டங்கள் உறுதியுடன் முன்னேறவும், முதலீடுகள் தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்புகள் மற்றும் வளமான எதிா்காலத்தை உருவாக்கவும் ஏற்ற தொழில் துறை சூழலை உருவாக்குவதே எங்களது உறுதிப்பாடாகும்’என்று தெரிவித்துள்ளார்.