சென்னை,
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு’ சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், 67,452 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,06,998 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், 4,476 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,074 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 8 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன. 2,676 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,550 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 5 திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், சென்னையில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் 2-வது வெற்றி தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற 25-ம் தேதி (புதன்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது மற்றும் மாநில இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட நோக்கங்களுடன் இந்த மாநாடு நடைபெற உள்ளது.
இம்மாநாட்டில் கையெழுத்தாகவுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் இடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.