தமிழக செய்திகள்

கஞ்சா விற்பனை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை மாநகரில் 3 பேர், கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த "மருந்து சரக்கு குற்றவாளிகள்" ஆவர்.

திருநெல்வேலி மாவட்டம், காங்கேயன்குளத்தைச் சேர்ந்த மாலையப்பத்தேவர் மகன் மகாராஜன் (வயது 39), திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையம், வீரமாணிக்கபுரத்தைச் சேர்ந்த சங்கரபாண்டி மகன் கணேஷ்குமார்(20) மற்றும் பாபநாசம் மகன் ரமேஷ்(44) ஆகிய 3 பேரும் திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த "மருந்து சரக்கு குற்றவாளிகள்" ஆவர்.

இதனையடுத்து மேற்சொன்ன 3 பேரும் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர்கள் வினோத் சாந்தாராம் (கிழக்கு), விஜயகுமார் (மேற்கு), போலீஸ் உதவி கமிஷனர்கள் இளவரசன் (டவுண் சரகம்), சுரேஷ் (பாளையங்கோட் சரகம்- பொறுப்பு) (மேலப்பாளையம் சரகம்), பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் (சட்டம் & ஒழுங்கு), மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தங்கத்துரை (சட்டம் & ஒழுங்கு) ஆகியோரின் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவுப்படி நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT