சட்டசபை 
தமிழக செய்திகள்

சட்டசபைக்கு 3 நாட்கள் விடுமுறை: திங்கட்கிழமை முதல்-அமைச்சர் விஜய்யின் பதிலுரை

திங்கட்கிழமை (7-ந் தேதி) சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது.

சென்னை,

சட்டசபைக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. அடுத்து வரும் திங்கட்கிழமை (7-ந் தேதி) முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் பதிலுரையுடன் சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது.

3 நாட்கள் விடுமுறை

தமிழக சட்டசபையில் இன்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை குறித்து பேசியதால், அவையில் அனல் பறந்தது.

இந்த நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி என்பதால் அரசு விடுமுறை நாளாகும். தொடர்ந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் அன்றும் சட்டசபைக்கு விடுமுறை. இவ்வாறு 3 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்படுகிறது. அடுத்து, வரும் திங்கட்கிழமை (7-ந் தேதி) சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது.

முதல்-அமைச்சர் பதிலுரை

அன்றைய தினம், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதில் அளிக்க இருக்கிறார். முன்னதாக, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அவர் இன்றே வெளியிட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT