தமிழக செய்திகள்

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஈரோட்டில் 3 நாள் வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி

ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பாக கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

ஈரோடு,

தமிழால் முடியும் வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி (2026-2027) - ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி

தமிழ் வளர்ச்சித் துறையின் ‘தமிழால் முடியும்’ வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி 30.11.2026 முதல் 02.12.2026 வரை ஈரோடு மாவட்டம், திண்டல், நஞ்சனாபுரத்தில் அமைந்துள்ள கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. 'தமிழால் முடியும்' என்ற வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சியில் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலுள்ள கல்லூரிகளில் தமிழ் வழியில் பயிலுகின்ற 200 மாணவ, மாணவியர் பங்கேற்றுப் பயிற்சி பெறவுள்ளனர்.

மனநலம் மற்றும் உணர்ச்சிசார் நுண்ணறிவு

மூன்று நாள்கள் நடைபெறவுள்ள இப்பயிற்சியில் 24 வகுப்புகளில் 24 பயிற்றுநர்கள் பயிற்சியளிக்கவுள்ளனர். முதல் நாளன்று (30.11.2026) சுற்றுச்சூழலும் பருவநிலை மாற்றமும் என்ற தலைப்பில் கோவை சதாசிவமும், கால மேலாண்மை என்ற தலைப்பில் முனைவர் வி. அன்புமணி, புவிசார் அரசியல் மற்றும் உலக அமைதி என்ற தலைப்பில் இரா. முருகவேள், அறிவியல் கண்டுபிடிப்புகளின் அரசியல் மற்றும் வரலாறு என்ற தலைப்பில் ப. சகஸ்ரநாமம், குழுப்பணி மற்றும் இணக்கமான உறவுகள் என்ற தலைப்பில் ஈரோடு கதிர், கவி புனையும் கலை என்ற தலைப்பில் கவிஞர் க. மோகனரங்கன், மனநலம் மற்றும் உணர்ச்சிசார் நுண்ணறிவு என்ற தலைப்பில் மரு. ஜெ. ஜெயப்பிரகாஷ், சமூகப்பொறுப்பும் மாணவர் ஆளுமையும் என்ற தலைப்பில் அன்புராஜ் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளனர்.

இலக்கியம் காட்டும் ஆளுமைத்திறன்

இரண்டாம் நாளன்று (01.12.2026) பக்தி இலக்கியம் என்ற தலைப்பில் சுமதி ஸ்ரீ, அறிவியல் தமிழ் மற்றும் கலைச் சொல்லாக்கம் என்ற தலைப்பில் முனைவர் இரா. விஸ்வநாதன், பேச்சாற்றலை வளர்த்தல் என்ற தலைப்பில் ஸ்டாலின் குணசேகரன், திரைப்படங்களும் தமிழ்ச்சமூகமும் என்ற தலைப்பில் அ. கரீம் , தமிழ்ப் படைப்புலகமும் கதை சொல்லலும் என்ற தலைப்பில் ஈரோடு சர்மிளா, அறிவியல் சிந்தனையும் போலி அறிவியலும் என்ற தலைப்பில் செ. கார்த்திகேயன் , இலக்கியம் காட்டும் ஆளுமைத்திறன் என்ற தலைப்பில் கவிஞர் சுடர்விழி அவர்களும், வனமேலாண்மை என்ற தலைப்பில் பேரா. கந்தசாமியும் பயிற்சி அளிக்கவுள்ளனர்.

தமிழ் இலக்கியங்களில் பெண்ணியம் மற்றும் சமத்துவம்

மூன்றாம் நாளன்று (02.12.2026) நிதி மேலாண்மை என்ற தலைப்பில் பேரா. நா. மணி, தமிழ்த் தட்டச்சு மற்றும் ஒலியியல் கருவிகள் என்ற தலைப்பில் தானதயாளன், அடிப்படை குடிமைப் பொறுப்புகளும் சமூக மாற்றமும் என்ற தலைப்பில் கண. குறிஞ்சி, தமிழ் இலக்கியங்களில் பெண்ணியம் மற்றும் சமத்துவம் என்ற தலைப்பில் கவிஞர் த. ஜீவலட்சுமி, வாசிப்பின் வழியே ஆளுமை வளர்ச்சி என்ற தலைப்பில் முனைவர் ந.கு.தனபாக்கியம் , ஓவியப்பாதை என்ற தலைப்பில் ஓவியர் சுந்தரன், தோல்வியைக் கையாளுதல் என்ற தலைப்பில் கா. செந்தில்குமார், நாட்டுப்புறவியலும் தமிழர் வாழ்வியலும் என்ற தலைப்பில் முனைவர் இ. கலைக்கோவன் ஆகியோரும் பயிற்சி அளிக்கவுள்ளனர். மேலும், ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பாக கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT