தமிழக செய்திகள்

3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

'எல்காட்' நிர்வாக இயக்குநர் கார்த்திகேயன், பேரூராட்சிகள் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பேரூராட்சிகள் இயக்குநரகத்தில் ஓராண்டு காலத்திற்கு தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய பேரூராட்சிகள் இயக்குநர் பதவிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, தமிழ்நாடு எல்காட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகப் பணியாற்றி வந்த கே.பி. கார்த்திகேயன், தற்போது புதியதாக உருவாக்கப்பட்டுள்ள பேரூராட்சிகள் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

இவருக்கு முன்னதாக இப்பொறுப்பில் இருந்த பிரியங்கா, தற்போது மின்னணு ஆளுமை முகமையின் இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இவர் தமிழ்நாடு மின்னணு ஆளுமை முகமையின் முதன்மைச் செயல் அதிகாரியாகவும் கூடுதல் பொறுப்பைக் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வெளிநாட்டு அயல் பணியை முடித்துக் கொண்டு தமிழக அரசுப் பணிக்கு திரும்பியுள்ள பி. விஷ்ணு சந்திரன், கே.பி. கார்த்திகேயனுக்கு பதிலாக தமிழ்நாடு எல்காட் நிறுவனத்தின் புதிய மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான அயல் பணி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தனியாகப் பின்பற்றப்படும் என்றும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பேரூராட்சிகள் இயக்குநர் பதவியானது சமூக நலத்துறை இயக்குநர் பதவிக்கு இணையான தகுதியை கொண்டது .

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT