தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 3 பேர் படுகாயம்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

தரகம்பட்டி,

கரூர் மாவட்டம் பொரணி அருகே கும்மாயம் பட்டியை சேர்ந்தவர் மணி (வயது 55). இவர் தனது மோட்டார் சைக்கிளில் அதே பகுதியை சேர்ந்த சரோஜா, லட்சுமி என்கிற வெள்ளையம்மாள் ஆகியோரை அழைத்து கொண்டு தனது உறவினரின் துக்க நிகழ்ச்சி சென்றார். பின்னர் அதே மோட்டார் சைக்கிளில் 3 பேரும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, ரெட்டியப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே மணப்பாறை நேதாஜி நகரை சேர்ந்த நாட்ராயன் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக மணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து 3 பேரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது