தமிழக செய்திகள்

தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்; தமிழ்நாடு அரசு உத்தரவு

அவருக்கு அடுத்தபடியாக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யான டி.எஸ். அன்பு உயரிய பதவியை வகிக்கிறார்.

சென்னை

தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதுபற்றி தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநராக அருண் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சென்னை காவல் துறை ஆணையராக இருந்த அருணை, தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்தது.

இதேபோன்று, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக டி.எஸ். அன்பு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். நிர்வாக ஏ.டி.ஜி.பி.யாக மகேஷ் குமார் தயாள் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இதில், தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக சந்தீப் ராய் ரத்தோர் பதவி வகித்து வருகிறார். அவருக்கு அடுத்தபடியாக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யான டி.எஸ். அன்பு உயரிய பதவியை வகிக்கிறார்.